விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன்- பார்த்திபன்

 
குண்டக்க மண்டக்க ஸ்டைலில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பார்த்திபன்!

விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன், என்னுடைய அரசியல் தனிப்பட்ட அரசியல் ஆக இருக்கும் என்று இயக்குனர் பார்த்திபன் கூறியுள்ளார்.

என் மனைவி பற்றி நான் தப்பா பேசல.. குடும்பத்தில் பிரச்சனை! மகள்  வருத்தப்படுறாங்க! பார்த்திபன் எமோஷனல் | Actor Parthiban spoke about the  confusion in his family as he ...

புதுச்சேரியில் தன்னுடைய படம் எடுப்பதற்காகவும், அதற்கு ஒத்துழைப்பு கேட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து இயக்குனர் பார்த்திபன் பேசினார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் பார்த்திபன், “புதுச்சேரியில் என் படம் எடுக்க, அரசுடைய ஒத்துழைப்புக்காக சுற்றுலாத்துறை அமைச்சரை பார்க்க வந்திருக்கேன். கடந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி அடைந்திருக்கிறது. வெற்றி அடையாத பெரிய படங்களுக்கு பின்னாடி ஆயிரம் காரணங்கள் இருக்கும். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க, என்னிடம் தயாரிப்பாளர்கள் கிடையாது.

“விஜய் தி.மு.க.வை எதிர்ப்பதுதான் சரி” - பார்த்திபன் | nakkheeran

பெரியார் எவ்வளவு பெரிய பெரியார் என்றால், சீமான் அரசியல் செய்வதற்கு பெரியார் தேவைப்படுகிறார்.  பெரியாராக இருப்பதால் இப்பவும் பெரியார் தேவைப்படுகிறார் என்று சீமான் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். நடிகை நயன்தாரா மீது ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட விக்னேஷ் சிவன்,  பெரிய பொக்கிஷமே நம்மிடம் இருக்கிறது. அதனால் அரசாங்க ஓட்டல் மீது ஆசைப்பட்டு அவர் கேட்டு இருக்கிறார். நடிகை நயன்தாரா திருமணம் வீடியோ விவாகரத்தில், நடிகர் தனுஷ் பணம் கேட்பதில் எந்த தவறும் கிடையாது. பணம் தான் மையம். அதற்கு மேல் எல்லாத்துக்கும் ஈகோ இருக்கிறது‌. விஜய்க்கு அட்வைஸ் கொடுக்கிற அளவுக்கு நம்ம இல்ல. அவருடைய பேச்சு ஆச்சரியமாக இருந்தது. அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் ஷாக் ஆகி உள்ளார். விஜய் இன்னும் நல்லா வளரட்டும். விஜயின் ஜனநாயகன் என்ற படத்தில் சவுக்கு இருக்கிறது.  விஜய் கட்சிக்கு செல்ல மாட்டேன். அரசியல் இருப்பவர்களிடம் நான் போக மாட்டேன். என்னுடைய அரசியல் தனிப்பட்ட அரசியல் ஆக இருக்கும். சினிமாவில் தனிப்பட்ட இடத்தை தொட்ட பிறகு, என்னுடைய அரசியல் புரட்சிகரமான அரசியலாக இருக்கும் என்று நம்புகின்றேன்” என்று தெரிவித்தார்.