இந்தியாவில் முதன்முறையாக கிளி போர்னா வைரஸ்-4 கண்டுபிடிப்பு..!

 
1

உலகெங்கிலும் கூண்டுகளில் வளர்க்கப்படும் கிளிகளுக்கு ஏற்படும் கடுமையான நோய்களுக்கும், திடீர் மரணங்களுக்கும் இந்த PaBV-4 வைரஸ்தான் முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. இந்த வைரஸ் சாதாரண பறவைகளைத் தாக்குவதில்லை. கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள் (Macaws), கொண்டைக்கிளிகள் (Cockatoos), காகட்டீல்கள் (Cockatiels), லவ்பேர்ட்ஸ் (Lovebirds) மற்றும் பட்ஜரீகர்கள் உள்ளிட்ட 'சிட்டாகைன்' (Psittacine) குடும்பத்தைச் சேர்ந்த பறவையினங்களையே குறிவைத்துத் தாக்குகிறது.

அசாம் விஞ்ஞானிகள் இந்தியாவில் முதன்முறையாகக் 'கிளி போர்னா வைரஸ் 4' (PaBV-4) தொற்றைக் கண்டறிந்துள்ளனர். கூண்டில் வளர்க்கப்படும் கிளிகளைத் தாக்கும் இந்த வைரஸ், 'PDD' என்ற ஆபத்தான நோயை ஏற்படுத்துகிறது. இது பறவைகளின் செரிமான மற்றும் நரம்பு மண்டலங்களைப் பாதித்து, உடனே உயிரிழக்கச் செய்யும். அசாம், கர்நாடகா, மேற்கு வங்கத்தில் 83 பறவைகளிடம் நடத்திய ஆய்வில் 44 பறவைகளுக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது.


கிளி போர்னா வைரஸ்-4 (PaBV-4) என்றால் என்ன?

Parrot Bornavirus-4 (PaBV-4) என்பது கிளி இனப் பறவைகளைப் பாதிக்கும் ஒரு வைரஸ். இது Bornaviridae குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் முதன்மையாக கிளிகளின் நரம்பு மண்டலம் மற்றும் செரிமான மண்டலத்தை தாக்குகிறது.இந்த வைரஸ் பாதிப்பால் ஏற்படும் முக்கிய நோய் Proventricular Dilatation Disease (PDD) ஆகும்.

PDD (Proventricular Dilatation Disease) என்றால் என்ன?

PDD என்பது கிளிகளுக்கு ஏற்படும் மிகவும் ஆபத்தான நோயாகும்.இதன் காரணமாக:

  • செரிமான உறுப்புகள் சரியாக செயல்படாது.
  • உணவை ஜீரணிக்க முடியாமல் போகும்.
  • நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.
  • சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பும் ஏற்படலாம்.
  • நோயின் அறிகுறிகள்

இந்த வைரஸ் தாக்கிய கிளிகளில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள்:

  • உடல் எடை வேகமாக குறைதல்
  • உணவை விழுங்குவதில் சிரமம்
  • ஜீரணிக்காத உணவு மலத்துடன் வெளியேறுதல்
  • வாந்தி
  • இறக்கைகள் நடுக்கம்
  • சமநிலை இழத்தல்
  • பறக்க முடியாமை
  • சில நேரங்களில் திடீர் உயிரிழப்பு

இந்தியாவில் எங்கு கண்டறியப்பட்டது?

இந்த வைரஸ் அசாம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட கிளி மாதிரிகளில் கண்டறியப்பட்டது.83 பறவைகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.அதில் 44 பறவைகளுக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இது இந்தியாவில் இந்த வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்திய முதல் ஆய்வாகும்.