நாடாளுமன்ற தேர்தல் - இன்று பாமக சிறப்பு பொதுக்குழு ஆலோசனை

 
PMK

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமக-வின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம், வரும் பிப்ரவரி 1-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெறும் என என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

pmk

கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முன்னிலையில் நடக்கும் இந்த பொதுக் குழுவில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலக பாமா மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், கட்சியின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.


pmk

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக இன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.