நாடாளுமன்ற தேர்தல்- தமிழக தேர்தல் குழுவை அறிவித்தது காங்கிரஸ் கட்சி

 
ks alagiri

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர்.

Image

இந்தியா முழுவதும்  நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தல் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைவராக உள்ள இந்த குழுவில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் இடம்பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள இக்குழுவில் தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், கார்த்திக் சிதம்பரம், விஜய் வசந்த் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்