"நாடாளுமன்றம் வெறும் செங்கல், சிமெண்ட் இல்லை பிரதமரே.. ஜனநாயகத்தின் சின்னம்" - எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம்!!

 
mp

நாடாளுமன்றம் வெறும் செங்கல், சிமிண்ட் இல்லை பிரதமரே. ஜனநாயகத்தின் சின்னம் என்று எம்.பி.சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 
tn

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வருகிற 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். 64 ஆயிரத்து 500 சதுர அடியில் முக்கோண வடிவில் நான்கு மாடிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது .ஆனால் மரபு படி நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் குரல் கொடுத்துள்ள நிலையில் , நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.  19 எதிர்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் புறக்கணிப்பு

நாடாளுமன்றம் வெறும் செங்கல் சிமிண்ட் இல்லை பிரதமரே

ஜனநாயகத்தின் சின்னம்

19 எதிர்க் கட்சிகளின் கண்டனம் தேசத்தின் குரல்." என்று பதிவிட்டுள்ளார்.