திமுக - காங்கிரஸ் ஜன.28ம் தேதி பேச்சுவார்த்தை

 
tn

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படும் நிலையில்  அரசியல் கட்சிகள்தேர்தல் பணிகளில் ஆயத்தம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுக நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழு ஆகிய குழுக்களை அமைத்து திமுக தலைமை அறிவித்தது.

arivalayam

அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

tr

இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் ஆலோசனை வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் காங்கிரஸ் குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகின்றனர்.