திமுக - விசிக இடையே இன்று பேச்சுவார்த்தை!!

 
tnt

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Thiruma

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை கணிசமாக தொடர்ந்து செய்து வருகிறது . இந்த சூழலில் திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்புக் குழு அமைத்தது திமுக.  தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்; தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும்; தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 3 குழுக்களை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  உத்தரவிட்டார். 

arivalayam

இந்நிலையில் திமுக - விசிக இடையே இன்று பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 3 மணிக்கு விசிக உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.