திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையம் - 50% பார்க்கிங் ஏரியா தற்காலிகமாக மூடல்!!

 
metro

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 50% வாகன நிறுத்தம் பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது.

metro

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, திருமங்கலம்மெட்ரோ இரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 50% வாகனநிறுத்தம் பகுதி 20.01.2024 முதல் இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.

Tunneling works commenced for Chennai Metro Phase 2 Corridors

​பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியைபயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகனபயன்பாட்டாளர்களுக்கு தற்காலிகமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என்று குறிப்பிடுள்ளது.