“திருமணமாகாதவர்களுக்கு அனுமதி இல்லை”- காதல் ஜோடிகளின் தொல்லை தாங்கததால் பூங்கா நிர்வாகம் அதிரடி முடிவு

 
ச் ச்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராமநாயக்கன் ஏரி பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில் திருமணமாகாதவர்களுக்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூரில் ராமநாயக்கன் ஏரி பகுதியில் நடை பாதை பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாடும் பகுதியாக உள்ளது. நடைபாதையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். பூங்காவிற்குள் ஆங்காங்கே வயதானவர்கள் ஓய்வெடுக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் பூங்காவிற்குள் இளம் ஜோடிகள் கல்லூரி மாணவர்கள் மருத்துவ செவிலியர்கள்,வேலைக்கு செல்வோர் என காலை முதல் இரவு வரை முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர் அவ்வப்போது போலீசார் எச்சரிக்கை விடுத்தாலும் அதனை பொருட்படுத்துவதில்லை இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் திருமணமாகாதவர்களுக்கு பூங்காவில் அனுமதி இல்லை என பேனர் வைக்கப்பட்டிருந்தது, பேனர் சர்ச்சைக்கு உள்ளானதால் தற்போது அதை அகற்றிவிட்டு புதியதாக வைக்க நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர்

இந்த பூங்காவில் தொடர்ந்து அருவருக்கத்தக்க செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள், இந்த பேனர் வைத்தது நல்லது தான். ஆனால் அதில் சில திருத்தங்கள் செய்திருக்க வேண்டும் என அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்பவர் தெரிவித்தனர், போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.