பெற்றோர்களே இது உங்களுக்காக..! பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க 10 ஆலோசனைகள்..!
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் கண்காணிப்பு அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளுக்குதீ பாதுகாப்பு விதிகள் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமா இருக்குது. குழந்தைகள் பட்டாசு வெடிக்கிறதை பார்த்து சந்தோஷப்பட்டு புகைப்படங்கள் மட்டும் பெற்றோர்களோட வேலையா இருக்கக்கூடாது அவங்களோட பாதுகாப்பையும் பெற்றோர்கள் அதிகம் கவனம் செலுத்தணும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் குறைந்தது ஒரு பெரியவர்கள் இருக்க வேண்டியது அவசியம்.ரொம்ப குறுகிய இடத்திலேயே, சுற்றிலும் மின்சார கம்மிகள் இருக்கும்இடத்திலையும் பட்டாசு வெடிக்கிறது முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும். திறந்த வெளியில் பட்டாசுகள் வெடிப்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
1. குழந்தைகள், பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இளம் சிறார்கள் வெடிகளைக் கொளுத்த அனுமதிக்கக் கூடாது.
2. பட்டாசு கொளுத்தும்போது, தளர்வான ஆடைகள் உடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, டெரிகாட்டன் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது.
3. பட்டாசு கொளுத்துமிடத்துக்கு அருகில் ஒரு வாளியில் தண்ணீரையோ அல்லது மணலையோ வைத்துக்கொள்ளுங்கள்.
4. பட்டாசை கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகிலோ வைத்து பற்றவைக்கக் கூடாது. மாறாக, பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். வெடிக்காத பட்டாசுகளைக் குனிந்து பரிசோதிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.
5. மூடிய பெட்டிகளில் அல்லது பாட்டில்களின் மேல் வைத்து பட்டாசுகளை வெடிக்கச் செய்யாதீர்கள். கண்ணாடிப் பொருள்கள் வெடித்து கண்களில் பட்டு, கண் பார்வை பாதிப்படையக் கூடும்.
6. ராக்கெட்டுகளை குடிசைகள் இல்லாத வெட்ட வெளிப் பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
7. பட்டாசுகளை மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை விற்பனைசெய்யும் கடைக்கு முன்பகுதியிலோ அல்லது அருகிலோ வெடிக்கக் கூடாது. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலோ அல்லது பெட்ரோல் எரிபொருள் கடைகளுக்கு முன்போ, பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ கூடாது.
8. மருத்துவமனைக்கு அருகிலும், முதியோர் இல்லங்களுக்கு அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிருங்கள்.
9. விலங்குகளைத் துன்புறுத்தும் வகையிலும், அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
10. அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில், அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் பாதிக்கப்படக்கூடும். ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்'
11முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று, தண்ணீர் மற்றும் மணலை பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் வைத்திருக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழந்தைகளுக்கு விளக்கமா எடுத்துரைக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து பட்டாசுகளை வாங்குவது நல்லது. அணுகுண்டு, ராக்கெட், செவன் ஷாட் போன்ற வான வேடிக்கைகள் மற்றும் அதிக சத்தம் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட பட்டாசுகளை குழந்தைகளை வெடிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.
12.வெடித்த பிறகு அல்லது வெடிக்காத வெடிகளை குழந்தைகள் தொடுவதனை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வெடித்த பின்பு அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதன் மூலம் மீண்டும் பட்டாசு வெடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படாது.
13.பட்டாசு வெடிக்கும்போது காயம் அடைந்தால் வீட்டு வைத்தியம் செய்வதைத் தவிர்க்கவும். மேலும் காயமடைந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.கண்களில் காயம் ஏற்பட்டால்,கண்களைத் தேய்க்க வேண்டாம்.ஒரு கண் நிபுணரிடம்சிகிச்சை உதவி பெற வேண்டும்.
பாதுகாப்பான முறையில் கொண்டாடுவோம்! விபத்துகளைத் தடுப்போம்!


