பெற்றோர்கள் ஷாக்..! இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அறிமுகமானது 'ஃப்ரீ ஃபயர்' கேம்..!

 
1

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட பிரபல ஆன்லைன் மொபைல் கேமான 'ஃபிரீ ஃபயர்' (Free Fire), சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் 'Free Fire India' என்ற பெயரில் இந்தியாவில் மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பயனர்களுக்காகப் புதிய கிராபிக்ஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட 'ஃப்ரீ ஃபயர்' செயலியை கரீனா நிறுவனம் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது. இதில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்குப் பெற்றோர் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், தினசரி 3 மணி நேரம் மட்டுமே விளையாடும் வகையிலும், மற்றவர்களுக்கு அதிகபட்சமாக 6 மணி நேர வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த கேமை விளையாடப் பெற்றோர் அல்லது காப்பாளரின் (Parental Consent) மொபைல் எண் சரிபார்ப்பு மற்றும் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விளையாடும் நேரக் கட்டுப்பாடு (Playtime Limits):

  • 18 வயதுக்கு மேற்பட்டோர்: நாளொன்றுக்கு அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்.

  • 18 வயதுக்குட்பட்டோர்: நாளொன்றுக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்.

  • தொடர்ச்சியாக விளையாடுவதைத் தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளிகளில் "ஓய்வு இடைவேளை நினைவூட்டல்கள்" (Break Reminders) திரையில் தோன்றும்.

கேமிற்குள் பொருட்கள் வாங்கச் செலவிடும் பணத்திற்குச் சிறுவர்களுக்கு குறிப்பிட்ட வரம்பு (Spending Caps) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்திய விளையாட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் இணையாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளை முழுமையாக ஏற்று, பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தியுள்ளதால் 'ஃபிரீ ஃபயர்' மீதான தடை நீக்கப்பட்டு இந்திய விளையாட்டாளர்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பைப் பெற்று வருகிறது