"செப்.4ல் ஓபிஎஸ் அணி சார்பில் மதுரையில் மாநாடு"
செப்.4 ஆம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில் மதுரையில் மாநாடு நடத்தப்படவிருப்பதாக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். சென்னை வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத்துவம் இல்லை என ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில் ஆலோசனை நடைபெற்றது.
அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழுவின் ஆலோசனை கூட்டடத்தில் உரையாற்றிய பண்ருட்டி ராமச்சந்திரன், “அரசியல் பாதையில் முன்னோக்கி செல்வதற்காக மதுரையில் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். செப்.4 ஆம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில் மதுரையில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இதற்காக மாவட்டம் தோறும் செயல்வீரர்கள் கூட்டம் கூட்ட வேண்டும். நாம் யார் பின்னாலும் செல்ல போவதில்லை, யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்தவில்லை. 2026 தேர்தலில் தெளிவான முடிவை எடுக்கும் வகையில் செப்டம்பரில் மாநாடு நடைபெறும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதே பாதையில் ஓபிஎஸ் வழி நடத்தவுள்ளார். இயக்கத்தை கட்டிக் காப்பதுடன் தமிழக எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய நிலை உள்ளது.” என்றார்.


