பங்குனி பவுர்ணமி 2026: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லப்போகிறீர்களா? இதோ முழு விவரம்!

 
1

பங்குனி மாத பவர்ணமி இந்த ஆண்டு ஏப்ரல் 1, 2026 (புதன்கிழமை) இரவு அல்லது ஏப்ரல் 2 அதிகாலை வரை இருக்கக்கூடும். பொதுவாக பவர்ணமி திதி தொடங்கும் நேரத்தைப் பொறுத்து ஏப்ரல் 1 இரவு 07:35 PM மணிக்குத் தொடங்கு ஏப்ரல் 2 வரை வியாழக்கிழமை மாலை சுமார் 06:55 PM மணியுடன் நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.  

 திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வது என்பது மிகவும் புனிதமாக பார்க்கப்படுகிறது.  திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பலவேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், இங்கு திருப்பதி போன்று எப்போதும் கூட்டம் அலைமோதும்.  

திருவண்ணாமலையில் பவர்ணமி கிரிவலுத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் எப்போதும் வருகை தருவார்கள், அதன்பிறகு அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலம்  பாதையில்  பவர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.   

திருவண்ணாமலையில் பவர்ணமி  நாளில் கிரிவலம் சென்றால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது ஜோதிட நம்பிக்கை. மேலும், இந்ந நாளில் வைக்கும் வேண்டுதல்களை சிவபெருமான் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. கிரிவலம் செல்லும்போது "சிவா மந்திரத்தை" உச்சரிக்க வேண்டும்.