தேனியில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு- இடித்து தள்ளிய மக்கள்

 
தேனியில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு- இடித்து தள்ளிய மக்கள் தேனியில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு- இடித்து தள்ளிய மக்கள்

தேனியில் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறி கட்டிடங்களை கல்லாலும், கட்டைகளாலும் இடித்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள 3.96 ஏக்கர் பஞ்சமி நிலத்தை சில தனிநபர்கள் ஆக்கிரமித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்துத் தள்ளி இன்று ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பஞ்சமி நிலத்திற்குள் புகுந்து அங்கிருந்த கட்டிடங்களை கல்லாலும் கட்டைகளாலும் அடித்து கீழே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய தீர்வு காணப்படும் எனக் கூறியதை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.