பெரும் பரபரப்பு! அரசு பள்ளி வகுப்பறைக்குள் வீசப்பட்ட மனித கழிவு!

 
school

 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனித கழிவு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனித கழிவு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளியின் 10ஆம் வகுப்பு அறையில் மர்ம நபர்கள் சிலர் மனித கழிவை வீசி சென்றுள்ளனர். இது தொடர்பாக பள்ளி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு வீசப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனித கழிவு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.