பல்லடம் நால்வர் கொலை - முக்கிய குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்!!

 
tn

பல்லடம் நால்வர் கொலை வழக்கில்  முக்கிய குற்றவாளி தப்பி ஓட முயற்சிக்கும் போது போலீசார்  காலில் சுட்டுப் பிடித்தனர்.

tn

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டின் முன்பு மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் மது அருந்தியுள்ளனர். இதனை செந்தில் ராஜ் தட்டிக்கேட்ட நிலையில், அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க முற்பட்ட போது செந்தில் ராஜின் தம்பி மோகன்ராஜ், அவரது தாய் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.  வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில்  மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து, சோனை முத்து என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

பல்லடம் படுகொலை - முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

இந்நிலையில் பல்லடம் நால்வர் கொலை வழக்கில் போலீசில் சரணடைந்த முக்கிய நபரான வெங்கடேஷ், தப்பி ஓடும் போது துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்தை, காட்ட அழைத்துச் செல்லும் போது தப்ப முயன்றதால், இரு கால்களிலும் சுட்டுப் பிடித்த போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்