பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி, மண்சோறு சாப்பிட்ட முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட தொண்டர்கள்..

 
பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி,  மண்சோறு சாப்பிட்ட முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட தொண்டர்கள்..

எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என வேண்டி அவரது  பிறந்தநாளில் அதிமுக முன்னாள் அமைச்சர் உள்பட அதிமுக தொண்டர்கள் மண்சோறு சாப்பிட்டுள்ளனர்.  

அதிமுக பொதுச்செயலாளரும்,  தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால்,  அனைத்து மாவட்டங்களிலும்  தொண்டர்கள் கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளைகளை வழங்கியும்  சிறப்பாக  கொண்டாடி வருகின்றனர்.

ep

அந்தவகையில்  பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயிலில் நகர அதிமுக சார்பில் சிறப்பு  அபிஷேகங்கள் மற்றும்  அலங்காரம் செய்து தீபாராதனை  நடைபெற்றது. அதன்பின்னர்  அன்னதானமும் பல்வேறு  நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.  இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து மீண்டும் தமிழ்நாடு முதல்வராக வேண்டும் என வேண்டி சென்னை மேற்கு மாம்பலத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அக்கட்சியினர் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.