பழனி கோயில் நில மோசடி வழக்கு - சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது
பழனி கோயிலின் ரூ.100 கோடி நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான பழநி ஆண்டவன் பூங்கா சாலையில் உள்ள பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை தனிநபர்கள் வெறும் ரூ.2 கோடிக்கு கடந்த ஜூலை 6-ம் தேதி பத்திரப்பதிவு செய்தனர். நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இதனிடையே பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழனி கோயிலின் ரூ.100 கோடி நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5வது ஆளாக இவர் கைது செய்யப்பட்டார். ஜஸ்டின் மணிகண்டனின் முன் ஜாமினை ஐகோர்ட் கிளை நேற்று ரத்து செய்த நிலையில், கொடைக்கானலில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

