பழனி கோயில் விவகாரம்- அரசு விசாரணைக் குழு அமைப்பு

 
இன்று பங்குனி உத்திரத்தினையும் பாதித்த கொரானா -உற்சாகமின்றி, களையிழந்த பழனி

பழனி கோயில் நிலப்பத்திரப்பதிவு முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையைக் கண்டறிய 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.


பழனி கோவில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறியும் நோக்கில், 3 அதிகாரிகள்  கொண்ட விசாரணைக் குழு பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் கூடுதல் பதிவுத்தலைவர், உதவி பதிவுத்தலைவர், மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவானது பத்திரப்பதிவு செய்யப்பட்ட அன்று பணியில் இருந்த சார் பதிவாளர் மேலும் அன்றைய தினம் விடுப்பிலிருந்த சார் பதிவாளர், உதவியாளர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்டோருடன் விரிவான விசாரணை மேற்கொள்ளும் மேலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்ட அன்றைய தினம் அந்த அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகளையும் இக்குழு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தும்.