பழனி உண்டியலில் தவறுதலாக விழுந்த தங்கச் சங்கிலி - அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்

 
tn

பழனி முருகன் கோவில்  உண்டியலில் தவறுதலாக தங்கச் சங்கிலி விழுந்த நிலையில்  அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தன் சொந்த செலவில் மாற்று தங்க சங்கிலியை அளித்தார்.

tn

இதுகுறித்து பழனி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு 19.09.2022ம் தேதி ஆலாபுலா மாவட்டம், பத்தியூர் கிழக்கு பகவதிபடி, கார்திகா பள்ளி வீட்டைச் சார்ந்த சசிதரன்பிள்ளை மகளான சங்கீதா என்ற பெண் பக்தர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே செல்லும் வழியில் தெற்கு மயில் வாகனம் அருகில் உள்ள உண்டியலில் சுவாமி மீது கொண்ட பக்தி பரவசத்தின் மிகுதியால் துளசி மாலையை கழற்றி உண்டியலில் செலுத்த எடுத்த போதுஅத்துடன் அணிந்திருந்த சுமார் 1 பவுன் தங்க செயினையும் சேர்த்து தவறுதலாக உண்டியலில் செலுத்திவிட்டார். தாங்கள் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தங்களது குடும்பத்தின் ஏழ்மை சூழ்நிலையினை கருத்திற்கொண்டு தவறுதலாக உண்டியலில் செலுத்தப்பட்ட தங்க செயினை திரும்ப வழங்குமாறு கடிதம் கொடுத்தார்.

palani murugan temple

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோயில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. ஆனால் Installation Safeguarding And Accounting of Hundials Rules 1975 ன்படி உண்டியலில் விழுந்த பொருள்கள் திரும்ப வழங்குவதற்கான வழிவகை எதுவும் இல்லாத நிலையில் அன்னாரது குடும்பத்தின் ஏழ்மைநிலையினை கருத்திற்கொண்டு இத்திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் திரு.க.சந்திரமோகன் அவர்கள் தன் சொந்த செலவில் ரூ.1,09,000/- மதிப்பில் 17.460 கிராம் எடையில் வழங்கிய தங்க செயினை இன்று (24.05.2023) அறங்காவலர்குழு உறுப்பினர் திரு.ச.மணிமாறன் அவர்கள் திருக்கோயில் அலுவலர்கள் முன்னிலையில் கேரளாவைச் சேர்ந்த சங்கீதா அவர்களுக்கு வழங்கினார். அவர்கள் தமது குடும்பத்துடன் திருக்கோயில் தலைமை அலுவலகம் வந்து நன்றியுடன் பெற்றுக்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.