பாலக்காடு- திருச்சி எக்ஸ்பிரஸ் டிச.1, 3 ஆகிய தேதிகளில் கொடுமுடியுடன் நிறுத்தம்
Nov 29, 2026, 11:28 IST1795931905875
பாலக்காடு டவுனிலிருந்து காலை 06:30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் (16844) ரயில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வருகிற டிசம்பர் 01 (செவ்வாய்) மற்றும் டிசம்பர் 03 (வியாழன்) ஆகிய இரண்டு நாட்களில் சேவை மாற்றத்துடன் இயக்கப்பட உள்ளது.
பயணிகள் கவனிக்க வேண்டியவை:
கொடுமுடியுடன் நிறுத்தம் (Short Termination): ஈரோடு – புகழூர் இடையே உள்ள கொடுமுடி ரயில் நிலையத்துடன் இந்த ரயில் நிறுத்தப்படும்.
முன்பதிவில்லா சிறப்பு ரயில்: பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, இந்த ரயில் கொடுமுடியிலிருந்து திருச்சிராப்பள்ளி வரை முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக (Unreserved Special) இயக்கப்படும்.
நிறுத்தங்கள்: கொடுமுடி – திருச்சி இடையே வழக்கமான 16844 ரயிலின் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.

