பத்மஸ்ரீ சின்ன பிள்ளைக்கு வீடு - இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்!

 
stalin

பத்மஸ்ரீ சின்ன பிள்ளைக்கு வீடு வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பத்மஸ்ரீ சின்ன பிள்ளை அவர்கள் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன்.  

கவலை வேண்டாம்!  


ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், #கலைஞரின்_கனவு_இல்லம் திட்டத்தின்கீழ் அவருக்குப் புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே கட்டுமானப் பணிகள் தொடங்கும்! என்று குறிப்பிட்டுள்ளார்.