பத்மஸ்ரீ விருது பெற்ற கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி; நெகிழ்ச்சியான தருணம்..!

 
1

நீலகிரி மாவட்டத்தில் குரும்பர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த மறைந்த ஓவியக் கலைஞர் கிருஷ்ணனுக்கு, இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிகவும் வறுமையில் உள்ள கிருஷ்ணனின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்துதர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி சுசிலாவிற்கு, முத்தோரை பாலாடாவில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிடப் பழங்குடியின மாதிரிப் பள்ளியில் தோட்டப் பணியாளர் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.