விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது - பிரதமருக்கு அண்ணாமலை நன்றி

 
tn

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

vijayakanth

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களுக்கு, பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ள மாண்புமிகு பிரதமர் திரு  @narendramodi அவர்களுக்கு,  @BJP4Tamilnadu  சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள், தமது  திரைப்பட வாழ்வில் பெரும்புகழ் பெற்றிருந்தவர். மேலும் அவர் ஒரு உண்மையான மக்கள் தலைவராக விளங்கியவர். மக்கள் நலனை மையமாகக் கொண்ட தமது அணுகுமுறையால், தமிழக அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.


கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்திய நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டது போல, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சமூக நெறிகளின் மொத்த உருவமாக, அனைவருக்கும் ஒரு உண்மையான கேப்டனாக வாழ்ந்தவர். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருது, மிகப் பொருத்தமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.