"ராஜ்மோகன் தலித்தா? இதுவரை ஏதாவது தலித் பிரச்னைக்கு குரல் கொடுத்தாரா?" - இயக்குநர் பா.ரஞ்சித்
8 தலித்களுக்கு அமைச்சர் பதவிக் கொடுப்பது மட்டும் மாற்றம் கிடையாது என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
சென்னையில் நீலம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “அம்பேத்கர் உங்கள் கொளைக் தலைவர் தானே... சேலம் மாவட்டத்தில் திறக்கப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலையை நீங்கள் சென்று திறந்து வைக்கலாமே...ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லை? தலித் அமைச்சர்களுக்கும் ஏன் கோபம் வரவில்லை. நீங்க நீட் எதிர்ப்பாளர்தானே? நீங்கள் பாசிசத்திற்கு எதிரானவர் தானே... எதுக்கு மாணவர்கள ஒடுக்குறீங்க? மாணவர்களை அடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?
முதலில் அமைச்சர் ராஜ்மோகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தானா என்பதே சந்தேகமாக உள்ளது. 8 தலித்களுக்கு அமைச்சர் பதவிக் கொடுப்பது மட்டும் மாற்றம் கிடையாது. ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் ஆகியும் தவெக பட்டியலின அமைச்சர்கள் இதுவரை ஏதாவது தலித் பிரச்னைக்கு குரல் கொடுத்தார்களா? சாதி ரீதியான மத ரீதியான சமரசங்களொடு தான் நீங்கள் ஆட்சி நடத்துவீர்கள் என்று எங்களுக்கு சொல்ல வருகிறீர்களா என்பது தான் எங்களுடைய கேள்வி” என்றார்.

