தெலங்கானா துணை முதல்வருடன் இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு!

 
ranjith

இயக்குநர் பா.ரஞ்சித் தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்காவை சந்தித்தார்.

தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குநராக விளங்கி வருபவர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இதேபோல் பரியேறும் பெருமாள், பேய் இருக்கா இல்லையா, இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் வெளியானது. இவர் சமூக பிரச்சனைகளுக்கும் அவ்வபோது குரல் கொடுத்து வருகிறார். 

இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தெலங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்காவை சந்தித்தார். நேற்று ஹைதராபாத்தில் இருவரும் நீண்ட நேரம் உரையாடலில் ஈடுபட்டனர். இயக்குநர் பா.ரஞ்சித், தெலங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்காவிடம் என்ன விஷயம் குறித்து பேசினார் என்ற தகவலை இரு தரப்பினரும் வெளியிடவில்லை.