"தவெக ஆட்சி சரியான திசையில் செல்கிறது" - சண்முகம்
Jul 19, 2026, 11:45 IST1784441731000
த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்தே ஆதரவு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம், “இஸ்லாமியருக்கான இடஒதுக்கீடு, திருப்பரங்குன்றம் தீப விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தவெக அரசு சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது . சிறந்த திட்டங்களை கொடுத்தாலும் 5 ஆண்டுகள் முடிவில் ஆட்சி சரியில்லை என்றே எதிர்க்கட்சிகள் சொல்வார்கள். தவெக அரசுக்கு வெளியில் இருந்தே ஆதரவு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவடு பற்றி அந்தநேர அரசியல் சூழலைப் பொறுத்து முடிவு செய்வோம்” என்றார்.

