தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது- ப.சிதம்பரம்

 
chidambaram

தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.



இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது. தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம். 2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும். தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.