"ஒற்றுமையில் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா, வா, வா" - ப. சிதம்பரம்

 
tn

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அகில இந்திய அளவில் கட்சியை  வளப்படுத்தவும்,  தொண்டர்களை  உற்சாகமடைய செய்யவும் பாரத் ஜோடா யாத்ரா என்று இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவாயில் இருந்து நடை பயணத்தை முதல்வர் மு.க .ஸ்டாலின் நேற்று தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.

tn

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம் கேரளா கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ,ராஜஸ்தான், உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர்  சென்று அடைகிறது . மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
 



இந்நிலையில் ராஜ்ய சபா உறுப்பினர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒற்றுமையில் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா, வா, வா" இன்று தொடங்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற  பாரத அன்னை நம்மை  வாழ்த்த வேண்டும் என்று வேண்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.