பாஜக இந்தியாவுக்கு விரோதமானது- ப.சிதம்பரம்

 
chidambaram

நாங்கள் 'பாரத்'-க்கு விரோதிகள் அல்ல. ஆனால், பாஜக இந்தியாவுக்கு விரோதமானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Image


காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே கொண்டுவரப்படுகிறது. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். உ.பி.யில் 40,000 வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாதி வென்றது பாஜகவை வீழ்த்த  முடியும் என்பதற்கு உதாரணம் . இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுவதால் இந்தியா என்ற பெயரை  எதிர்க்கிறது. நாங்கள்  ‘பாரத்’க்கு விரோதிகள் அல்ல. ஆனால், பாஜக இந்தியாவுக்கு விரோதமானது.

ஜி20-க்கான குடியரசுத் தலைவரின் விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைக்கப்படாது கண்டிக்கத்தக்கது. வேறு எந்த ஜனநாயக நாட்டின் அரசும் உலக தலைவருகளுக்கான அரசு விருந்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு அழைப்பு விடுக்காததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஜனநாயகமோ, எதிர்க்கட்சியோ இல்லாத நாடுகளில்தான் இது நடக்கும். ஜனநாயகமும், எதிர்ப்பும் இல்லாத நிலையை இந்தியா அடையவில்லை என நம்புகிறேன்” என்றார்.