தமிழகத்திற்கு பாஜக ஆட்சியில் அதிக நிதியா? - ப.சிதம்பரம் பதிலடி

 
chidambaram chidambaram

பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூடிய நிலையில், இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். 

 
தமிழகத்திற்கு வருகை தந்திருந்த பிரதமர் மோடி பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2004-14ஐ விட 2014-24 தமிழ்நாட்டுக்கு அதிகமான நிதி வழங்கி உள்ளதாக பிரதமர் மோடியும் ஒன்றிய அமைச்சர்களும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். 'பொருளாதார அளவுகோல்' என்பது முந்தைய ஆண்டுகளை விட, நடப்பாண்டில் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். 
முதல் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவரைக் கேட்டால் கூட இதைச் சொல்வார். GDP, ஒன்றிய பட்ஜெட், அரசின் செலவினம் என அனைத்தும் ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டில் அதிகமாகத்தான் இருக்கும். எண்கள் என்ற அடிப்படையில் அதிகமாக இருப்பது முக்கியமல்ல. ஒட்டுமொத்த GDP, செலவினத்தின் விகிதாச்சார அடிப்படையில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதா? என குறிப்பிட்டுள்ளார்.