எக்ஸிட் போல் முடிவுகளை தயாரித்ததே பாஜக தான்- ப. சிதம்பரம்

 
P chidambaram

ஜவஹர்லால் நேருவுடன் தன்னை மோடி ஒப்பிட்டுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “மணிப்பூர் கலவர சம்பவம் நாட்டிற்கே களங்கம். அரசியல் சாசனத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு 240 எம்பிக்களை மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி மணிப்பூருக்கு இதுவரை செல்லாதது ஏன்? மணிப்பூர் மக்கள் குறித்து பிரதமர் கவலை அடைந்ததாக தெரியவில்லை. எக்ஸிட் போல் முடிவுகளை தயாரித்ததே பாஜக தான். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.  மேலும் நிப்டி யில் 50 ஷேர் சென்சஸ் 100 ஷேர் இவைகளை வைத்து மட்டுமே நிர்ணயிக்கின்றன.


நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்னை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஜவஹர்லால் நேருவுடன் தன்னை மோடி ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. அவ்வாறு ஒப்பிட்டுக்கொள்வதை காங்கிரஸ் நிராகரிக்கிறது” என்றார்.