#BREAKING மாறப்போகும் அரசியல் களம்... திருமாவை சந்தித்தார் ப.சிதம்பரம்

 
s

விசிக தலைவர் திருமாவளவனை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்து பேசினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.

விசிக தலைவர் திருமாவளவனை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்து பேசினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். ப. சிதம்பரத்தை, விசிகவின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இதனையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், இண்டியா கூட்டணியில் விசிக உள்ளிட்ட கட்சிகளை தக்க வைப்பது, பலப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழக அரசியல் சூழல் குறித்தும், அகில இந்திய நிலைப்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.