ஜல்லிக்கட்டில் காளை முட்டி காளையின் உரிமையாளர் பரிதாப பலி

 
ச்

புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டி ஜல்லிக்கட்டில் காளை குத்தியதில் காளையின் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Image

புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் முனியாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை குத்தியதில் மாட்டின் உரிமையாளரான பொற்பனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (23) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். வாடிவாசலில் இருந்து காளை வெளியேறி கலெக்ஷன் பாயிண்ட் என்று சொல்லக்கூடிய பகுதியில் செல்லும் பொழுது காலை உரிமையாளரன மாரிமுத்து அந்தப் பகுதியில் குறுக்கே நடந்து சென்ற போது மாரிமுத்துவின் மார்பில் அந்தப் பகுதியில் வந்த காளை ஒன்று குத்தியதில் படுகாயமடைந்து அவர் உயிரிழந்தார். 

இதனையடித்து உயிரிழந்த மாரிமுத்துவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்ற போது அவரது உடலை பார்த்து மாரிமுத்துவின் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து மழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.