கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் - மாநகராட்சி அதிரடி!

 
கால்நடைகள்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தெருக்கள், சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தான்தோன்றித்தனமான சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனைச் சீர்செய்யும் விதமாக மாநகராட்சி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்...  மாநகராட்சி அதிரடி! | nakkheeran

அதன்படி கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்குச் சொந்தமான விலங்குகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே அல்லது வீட்டிலேயே கட்டி வைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் தெருக்களிலோ, சாலைகளிலோ கால்நடைகளை சுற்றித்திரியவிட்டால், அவை மாநகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்படும்.

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்- Dinamani

மேலும் அவற்றின் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளவில்லை எனில் மாநகராட்சி அருகிலுள்ள கால்நடை சந்தையில் விற்பனை செய்து கிடைக்கும் தொகையை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.