பிரியாணி சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்! கம்பெனி சாப்பாட்டில் நச்சு?

 
பிரியாணி சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்! கம்பெனி சாப்பாட்டில் நச்சு?

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைபாக்கம் சிப்காட் வளாகத்தில் தனியார் தொழிற்சாலையில் பிரியாணி சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் டி.எஸ்.என்ற தொழிற்சாலை உள்ளது. அந்த தனியார் தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தொழிற்சாலையில் இரவு உணவாக சிக்கன் பிரியாணி போடப்பட்டுள்ளது. பிரியாணி சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திடீரென 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடல் நலக்குறைவு ஏற்பட்ட அனைவரும், ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதிப்புக்கு Food Poisoning காரணமா? என்ற கோணத்தில் வழக்கு பதிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.