நவ.1 முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமை இயங்காது..!

 
1

தமிழகச் சட்டமன்றத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் 'வருகையில்லா ஆவணப் பதிவு' முறை விரிவுபடுத்தப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், சனிக்கிழமைகளில் இயங்கி வந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டுமே செயல்படும் என்றும், சனிக்கிழமை கட்டாயப் பணி முறை முழுமையாகக் கைவிடப்படுவதாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சனிக்கிழமைகளில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது; 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்த சனிக்கிழமை கட்டாயப் பணி கைவிடப்படுகிறது; சட்டப்பேரவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவித்த நிலையில் அரசாணை வெளியீடு