#BIG NEWS : நம்ம தளபதி முதலமைச்சர் விஜய் தான் அடுத்த பிரதமர்: தவெக MLA கனிமொழி..!

 
11

2026-ல் விஜய் முதலமைச்சராவார் என்று தாம் கணித்தது போலவே, 2029 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளராக உருவெடுப்பார் என தவெக MLA கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (செப்.2) பேட்டியளித்த அவர், விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்தது போல, பிரதமர் நாற்காலியிலும் ராகுல் காந்தி அமரவைப்பார் என்றும் கூறினார்.

“2029இல் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் தான். 2025இல் நான் கணித்ததைப் போல 2026இல் விஜய் முதலமைச்சரானார். 2026இல் சொல்கிறேன் 2029இல் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார்” என்றார்.

மேலும், “2029இல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது. பிரதமரை இனி டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவது இல்லை. ராகுல் காந்திதான் விஜயை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் ராகுல் காந்தியே தலைவர் தளபதியை அவரை பிரதமராக அமர வைப்பார்” என்றும் கனிமொழி தெரிவித்தார்.