ஆளுநரே தேவை இல்லை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு - அமைச்சர் சி.டி.ஆர்..!
தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
"பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்பது ஒரு ஆளுநருக்கு தெரியாது. எங்களை பொறுத்தவரை, ஆளுநர் என்பவர் ஒரு மேனேஜர்தான். மாநிலத்தை நிர்வகிக்கும் அரசுக்கு மட்டுமே மாணவர்களுக்கும், மக்களுக்குமான தேவைகள் என்ன என்பது குறித்து தெரியும்.
ஒரு மாநிலத்தின் ஆளுநராக, மோடியின் உறவினரோ, அமித்ஷாவின் உறவினரோ கூட நியமிக்கப்படலாம். அப்படி நியமிக்கப்படுபவர்களுக்கு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் திறன் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாது.
ஒரு மேனேஜர் போனால் அடுத்த மேனேஜர் வருவார்கள். அதுபோலதான் ஆளுநரும். எனவே, ஆளுநரே தேவையில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே மேற்கொள்ளும்" என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் இணைவு பெற்ற 21 சட்டக் கல்லூரியில் உள்ள ஐந்தாண்டு சட்டப் படிப்பில் இடங்களை தேர்வு செய்தவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வழங்கினார்.
மேலும், கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் முதலிடங்களை பிடித்து சீர்மிகு சட்டக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "தமிழ்நாட்டில் உள்ள சட்டக்கல்லூரிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். விரைவில் சென்னையில் பெண்களுக்கான உலக தரம் வாய்ந்த சட்டக் கல்லூரி தொடங்கப்பட இருக்கிறது" என்றார்.
மின்சாரத்துறை வெள்ளை அறிக்கையில் கடனுக்கான காரணம் இடம் பெறுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விவரங்களை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எதனால் கடன் வந்தது? எவ்வளவு வருவாய் வந்தது? எவ்வளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது? எவ்வளவு ட்ரான்ஸ்பார்மர்கள் வந்துள்ளன? பயன்பாடு எவ்வளவு? புதிய திட்டங்கள் என்னென்ன? எதனால் கடன் சுமை? ஆகிய விவரங்களை எடுத்து வருகிறோம். இரண்டு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்" என்றார்.
மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "எங்கெங்கு எதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை ஒவ்வொரு நாளும் தெரிவித்து வருகிறோம். எவ்வளவு நேரத்தில் மின்வெட்டை சரி செய்கிறோம் என்பதையும் தெரிவித்து வருகிறோம். 125 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் ரோந்து பணிகள் செய்து வருகிறோம்" என்றார்.
ஆளுநர் என்பவர் ஒரு மேனேஜர் மாதிரி தான்.. ஆளுநரே தேவை இல்லை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு - அமைச்சர் சி.டி.ஆர்#Chennai | #Governor | #CTRNirmalkumar | #PolimerNews pic.twitter.com/ZV7lcV7bQ3
— Polimer News (@polimernews) June 22, 2026

