எங்கள் நிறுவனத்தின் முதல் படம் அப்டேட் நாளை அறிவிக்கப்படும் - நெல்சன்..!

 
1

தமிழ் சினிமாவில் இருக்கும் பல திறமை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் நெல்சன் . தொலைக்காட்சியில் இருந்து கோலமாவு கோகிலா என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்கப்பட்டிருந்த போது திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா என திரையுலகம் ஏக்கத்துடன் காத்திருந்த வேளையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் திரையரங்குகளுக்கு மக்களை மீண்டும் வர வைத்தது.

இதையடுத்து அவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் சற்று மந்தமாக ஓடிய நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டாரை வைத்து நெல்சன் எடுத்த ஜெயிலர் படம் தாறுமாறான வெற்றியை கொடுத்தது.

இப்படி கலக்கல் இயக்குனராக வலம் வரும் நெல்சனின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என எதிர்பார்த்திருந்த வேளையில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக இயக்குநர் நெல்சன் அனைவர்க்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நெல்சன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் எனது பயணம் 20 வயதில் தொடங்கியது. பல ஆண்டுகளாக, இந்தத் துறையில் எனது வளர்ச்சிக்கு பல ஏற்ற தாழ்வுகள் பங்களித்துள்ளன. எல்லாவற்றுக்கும் மத்தியில், ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக வைத்திருப்பது எப்போதுமே எனது நிலையான விருப்பமாகும்.

இன்று எனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

Filament Pictures இல், பார்வையாளர்களை மகிழ்விக்கும் ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்குவதே எங்களின் முதன்மையான குறிக்கோள்.

எங்கள் நிறுவனத்தின் முதல் படம் குறித்த அப்டேட் மே 3ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உங்கள் ஆதரவுக்கு நன்றி என நெல்சன் தெரிவித்துள்ளார்.

1