தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி OTP கட்டாயம்

 
ச் ச்

கவுண்ட்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய விரைவில் ஓ.டி.பி. கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்..  கொதிக்கும் பயணிகள்! | Railway Tatkal Ticket Booking Rules Otp must in  reservation counters
-

நீண்டதூர பயணத்துக்கு ரெயில் பயணத்தையே மக்கள் விரும்புகின்றனர். இதில், பெரும்பாலான பயணிகள் ஐ.ஆர். சி.டி.சி. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து வரு கின்றனர். இதேபோல, தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவில் ஏற்படும் பல்வேறு குளறுபடிகளைத் தடுக்க கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது. இதற்கிடையே, நேரடியாக சென்று டிக்கெட் கவுண்ட்டர் களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை ரெயில்வே வாரியம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த புதிய நடைமுறை சோதனை அடிப்படையில் கடந்த மாதம் 17-ந்தேதிசிலரெயில்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இது வரவேற்பை பெற்ற நிலையில் கூடுதலாக 52ரெயில்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறையின்படி, தட்கல் டிக் கெட்முன்பதிவு செய்யும் பயணி தனது முன்பதிவு படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரப்பெறும். ஓ.டி.பி. சரிபார்க்கப்பட்ட பின்னரே அவருக்கு தட்கல் டிக் கெட் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட்முன்பதிவில் தவறான பயன்பாட்டைதவிர்க் கும் வகையில் இந்த நடைமுறை அமல்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.