97வது ஆஸ்கர் விழாவில் விருதுகளையும் அள்ளிய அனோரா!

 
oscar anora

97வது ஆஸ்கர் விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்குநர், நடிகை என மொத்தமாக  விருதுகளை அள்ளி குவித்துள்ளது பேகரின் அனோரா திரைப்படம்.

Image

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று காலை தொடங்கியது. சிறந்த துணை நடிகர், துணை நடிகை பிரிவுகளில் கீரன் கல்கின், ஜோ சல்டானா ஆஸ்கர் விருதுகளை வென்றனர். சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை 'THE SUBSTANCE' திரைப்படம் தட்டிச் சென்றது. சிறந்த திரைக்கதை பிரிவுகளில் அனோரா மற்றும் கான்க்ளேவ் படங்கள், ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றன. சிறந்த அனிமேஷன் பிரிவில் FLOW திரைப்படம் மற்றும் IN THE SHADOW OF THE CYPRESS குறும்படம் ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை தட்டி சென்றது `I'M NOT A ROBOT'. சிறந்த ஒலிக்கான விருதை DUNE: PART TWO பெற்றது. DUNE முதல் பாகத்திற்கு விருது வென்ற RON BARTLETT, DOUG HEMPHILL 2ம் பாகத்திற்கும் விருது வென்றிருக்கிறார்கள். `THE BRUTALIST' திரைப்படத்திற்காக Lol Crawley-க்கு  சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது 'NO OTHER LAND'. சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது `Wicked' படத்திற்காக பால் டேஸ்வெல்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Image


சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை `அனோரா (Anora)' படத்தை இயக்கிய Sean Baker தட்டிச் சென்றார். அனோரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார் மைக்கி மேடிசன். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது 'THE BRUTALIST'  திரைப்படத்தில் நடித்த அட்ரியன் பிராடிக்கு அறிவிக்கப்பட்டது. இவர் முன்னதாக கோல்டன் குளோப் விருதினையும் வென்றார். 'தி பியானிஸ்ட்' படத்திற்காக 29 வயதிலேயே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை 2002ஆம் ஆண்டில் வென்றவர் அட்ரியன் பிராடி என்பது குறிப்பிடதக்கது.

.