“ஆஸ்கர் உறுப்பினர்கள் முட்டாள்கள் இல்லை” - ஏ.ஆர்.ரஹ்மான்

 
ar rahman ar rahman

ஸ்லம்டாக் மில்லியனர் உங்களின் மிகச்சிறந்த படைப்பா நிச்சயமாக எனது சிறந்த படைப்புதான் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

"ஐகானிக்கான ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!" - ஹான்ஸிம்மருடன் பணியாற்றுவது பற்றி ஏ.ஆர். ரஹ்மான்

நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “ஸ்லம்டாக் மில்லியனர் உங்களின் மிகச்சிறந்த படைப்பா நிச்சயமாக எனது சிறந்த படைப்புதான். ஹாலிவுட் சூழலில் நான் உருவாக்கிய அந்த ஒலிக்காட்சி அதற்கு முன் அங்கு இருந்ததில்லை. மேற்கத்திய நாடுகளுக்கு அது ஒரு புதிய மற்றும் அற்புதமான அனுபவமாக இருந்தது. உலகத் தரம் வாய்ந்த இசையைக் கேட்டுப் பழகிய அந்த ஆஸ்கார் உறுப்பினர்கள் ஒரு படைப்பிற்கு வாக்காளிக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...

இன்றைய காலகட்டத்தில் படங்கள் என்ன நோக்கத்தில் எடுக்கப்படுகிறது எனக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில படங்கள் தீய நோக்கங்களுக்காக எடுக்கப்படுகின்றன. அப்படியான படங்களை நான் தவிர்க்கப் பார்க்கிறேன். Chhaava கூட பிரிவினையை பேசும் படம் தான். அது பிரிவினையை காட்டி பணம் சம்பாதித்தது. ஆனால் அதன் மையக்கரு துணிச்சலைக் காட்டுவது என்று நான் நினைக்கிறேன். நான் இயக்குநரிடம், “இதற்கு நான் ஏன்?” என்று கேட்டேன். இதற்கு நீங்கள் மட்டுமே தேவை என்று அவர் கூறினார். ஆனால் மக்கள் அதைவிட புத்திசாலிகள் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன். மக்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளது. அது உண்மை என்ன? திரிபு என்ன? என்பதை அறிந்திருக்கிறது” என்றார்.