டெல்டாவில் குடிநீருக்கே பஞ்சம்- ஓ.எஸ். மணியன் வேதனை

 
டெல்டாவில் குடிநீருக்கே பஞ்சம்- ஓ.எஸ். மணியன் வேதனை

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்ட நிபுணர்கள், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விசிக சார்பில் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, மமக சார்பில் ஜவாஹிருல்லா, தவாக சார்பில் வேல்முருகன், கொமதேக சார்பில் ஈஸ்வரன், பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், பாஜக சார்பில் கரு.நாகராஜன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவிரி விவகாரம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்  தொடங்கியது… – today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், “மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஆட்சியில் இருக்கின்ற கட்சிகள் அது காங்கிரசாக இருந்தாலும் சரி,பாஜகவாக இருந்தாலும் சரி அவர்கள் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்பதிலேயே வஞ்சிக்கிறார்களே தவிர அவர்கள் பொதுநோக்கோடு, மனிதாபிமானத்தோடு சட்டத்தை மதித்து நடக்கிறார்களா என்றால் இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை. அதிமுக ஆட்சியில் குறுவைக்கும், சம்பாவுக்கும் தனியாக பயிர் காப்பீட்டு செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் குறுவைக்கான பயிர் காப்பீட்டை ரத்து செய்துவிட்டனர். டெல்டாவில் நிலத்தடி நீர் இல்லாத இடங்களில் குடிநீருக்கே பஞ்சம் நிலவுகிறது. 

Image

1 TMC தண்ணீர் வழங்க காவிரி மேலான்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 3 TMC தண்ணீர் வழங்கினால் தான் விவசாயம் மற்றும் குடிநீருக்கு அதை பயன்படுத்த முடியும். உபரி நீரை, உரிமை நீராக கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. காங்கிரஸும், பாஜகவும் நம்மை வஞ்சிக்கின்றன” என்றார்.