#BREAKING ORSL விற்பனைக்கு தடை
ORSL விற்பனைக்கு தடை விதித்து அதனை மருந்தகம், கடைகளிலிருந்து பறிமுதல் செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஓரல் ரீஹைடிரேஷன் சொல்யூஷன் என்பதன் சுருக்கமாக ORS என அழைக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவைகள் உண்டாகும் போது ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக உப்பு, எலக்ட்ரோலைட்டுகள், குளுகோஸ் அடங்கியுள்ள ORS கொடுக்கப்படுகிறது. WHO, தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் பெயர் அச்சிடப்பட்ட ORS மட்டுமே விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ORSL, ORSL PLUS, ORS FIT போன்ற மருந்துகளில் அதிகளவு சோடியம் குளுகோஸ் இருப்பதால் அதை உட்கொண்டால் நோயின் தாக்கம் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ORSL விற்பனைக்கு தடை விதித்து அதனை மருந்தகம், கடைகளிலிருந்து பறிமுதல் செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ORSL, ORSL Plus, ORS FIT என்ற பெயர்களில் மருந்துகள் விற்பனை செய்ய தடை விடிக்கப்பட்டுள்ளது.


