வாரி வழங்கும் ஸ்டாலின்! அரசுப் பள்ளி பயிற்றுநர்களுக்கு மே மாத உதவித்தொகையாக ரூ.10,000 வழங்க ஆணை
Mar 3, 2026, 22:48 IST1772558304342
அரசுப் பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, இசை உள்ளிட்டவற்றின் பயிற்றுநர்கள் 11,773 பேருக்கு தொகுப்பூதியம் ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததன்படி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் கீழ் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஓவியம், உடற்பயிற்சி, இசை உள்ளிட்டவற்றின் பயிற்றுநர்கள் 11,773 பேருக்கு மாத தொகுப்பூதியம் ரூ.12,500/- லிருந்து ரூ.15,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுப்பூதிய உயர்வு 01.01.2026 முதல் அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

