"பள்ளி செல்லாத குழந்தைகள்" - பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு!

 
PM Schools

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க  பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் கல்வி மேம்படவும் , அவர்களுக்குள்ள திறமைகளை ஊக்குவிக்கவும் பல்வேறு நடைமுறைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கல்வியின் தரம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. 

schools open

இந்நிலையில் பள்ளிக்குச் செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை  அதற்கான புதிய வழிகாட்டு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

➤ வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும்

➤ 5,8,10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா? என்பதை உறுதி செய்ய வேண்டும்

➤ 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்

School Education

➤ EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்

➤ சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, சிறப்புத் தேவை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் 

 ➤ புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும்