செங்கல்பட்டு தொடங்கி விழுப்புரம் வரை வைக்கப்பட்ட தவெக பேனரை அகற்ற உத்தரவு

 
ச் ச்

செங்கல்பட்டு தொடங்கி விழுப்புரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தவெக பேனர்களை அகற்ற உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை பகுதியில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50,000 இருக்கைகளுடன் பிரமாண்டமாக தயாராகி வரும் மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற தேசிய தலைவர்ளுடன் இவருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரமாண்டமாக கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.  மாநாட்டு பணிகள் ஒருபுறம் நடைபெற்று இருந்தாலும் மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களையும் பொதுமக்களையும் அழைத்து வர கட்சி நிர்வாகிகள் பல்வேறு முறைகளில்  ஏற்பாடு செய்து வருகின்றனர். 

இதனிடையே தவெக மாநாட்டு திடலில்  வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கார்க் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு தொடங்கி விழுப்புரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தவெக பேனர்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.