பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த பிரபல தாதா வரிச்சூர் செல்வம். இவர் இதுவரை 150 திருமணம் செய்துள்ளாடாக தெரிகிறது. திருச்சி ஜெயிலில் இருந்துவிட்டு, பின்னர் எந்த தவறும் செய்யமாட்டேன் என காவல்துறையிடம் எழுதி கொடுத்துவிட்டு வந்த இவர், தனது கூட்டாளி செந்திலை கொலை செய்தார். ஆள்கடத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ரவுடி வரிச்சூர் செல்வம் மீது உள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவையில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்து என கட்டப்பஞ்சாயத்திற்காக பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவலர்கள் சோதனை செய்து வருகின்றனர். தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல்துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.