காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு- மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, வரும் 28 முதல் அக்., 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இதையறிந்த
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். காட்டாங்கொளத்தூர் சிறப்பு வகுப்பு நடைபெற்ற பள்ளியில் இருந்து மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடரந்து பள்ளி நிர்வாகத்தினர் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். அரசு அனுமதியை மீறி சிறப்பு வகுப்புகள் நடைபெறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.